தொடரும் சோகம்; 2025 வரை விமானம் செயல்பாட்டில் இருக்கும் மிக்-21
1 min read

தொடரும் சோகம்; 2025 வரை விமானம் செயல்பாட்டில் இருக்கும் மிக்-21

ராஜஸ்தானில் மிக்-21 விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். விமானப்படையில் மிகவும் பழைய விமானமாக இருக்கும் இந்த மிக்-21 விமான ஸ்குவாட்ரான்கள் 2025வரை செயல்பாட்டில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது விமானப்படையில் மூன்று ஸ்குவாட்ரான்கள் அளவு மிக்-21 பிஸ் ரக விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன.இவை மேற்கு செக்டாரில் முன்னனி தளங்களில் செயல்பாட்டில் உள்ளன.தேஜஸ் மார்க்1ஏ ரக விமானங்கள் இந்த வருட இறுதி முதல் விமானப்படையில் இணைக்கப்பட உள்ளன.

இந்த புதிய விமானங்கள் இணைக்கப்படும் போது பழைய மிக்-21 விமானங்கள் படையில் இருந்து விலக்கப்பட்டு ஓய்வளிக்கப்படும்.மிக்-21 விமானங்களின் இடைவெளியை நிரப்ப தேஜஸ் விமானங்கள் முன்னனி தளங்களில் நிலைநிறுத்தப்படும்.

விமானப்படையின் திறனை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தற்போது புதிய ரபேல் விமானங்கள் இணைக்கப்பட்டு முன்புற எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.மேலும் தேஜஸ் விமானங்களை படையில் இணைக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.