இந்த ஆண்டு இறுதியில் சுதேசி இலகுரக டாங்கியின் சோதனை !!
1 min read

இந்த ஆண்டு இறுதியில் சுதேசி இலகுரக டாங்கியின் சோதனை !!

நமது DRDO – Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் L & T நிறுவனம் ஆகியவை கூட்டாக தயாரித்து வரும் சுதேசி இலகுரக ஸோராவர் டாங்கியின் சோதனை இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகள் கூறும்போது இந்த ஆண்டு இறுதியில் சோதனைகளை நடத்த உள்ளதாகவும் லடாக்கில் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பிறகு தரைப்படையிடம் பயன்பாட்டு சோதனைகளுக்காக ஒப்படைக்கப்படும் என கூறினர்.

தற்போது இத்தகைய 59 டாங்கிகளுக்கு மட்டுமே ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது ஆனால் இது 600 டாங்கிகளாக அதிகரிக்கலாம் இதற்கு குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் உப்பு நீர் சதுப்பு பாலைவன நில பகுதி மற்றும் பாலைவன பகுதிகளில் சிறப்பாக செயல்படும் டாங்கிகள் தேவைப்படும் என்பது காரணம்

மேலும் 2020 இந்திய சீன எல்லை மோதலின் போது அதிக உயரத்தில் வழக்கமான கனரக டாங்கிகளை விடவும் வேகமாக மற்றும் எளிதாக நகரும் எடை குறைந்த டாங்கிகளின் தேவையை இந்திய தரைப்படை உணர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பண்டைய திபெத், இன்றைய லடாக், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போன்ற இமயமலை பகுதிகளில் பல போர்களை நடத்தி வெற்றி கண்ட சீக்கிய தளபதியான ஜெனரல் ஸோராவர் சிங் இன் நினைவாக அவரது பெயர் இந்தியாவின் இலகுரக டாங்கிக்கு சூட்டப்பட்டுள்ளது கூடுதல் தகவல்.