Breaking News

முக்கிய உக்ரைன் நகரம் வீழ்ச்சி ரஷ்யாவுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் உலக ராணுவ வரலாற்றில் புதிய அத்தியாயம் !!

  • Tamil Defense
  • May 23, 2023
  • Comments Off on முக்கிய உக்ரைன் நகரம் வீழ்ச்சி ரஷ்யாவுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் உலக ராணுவ வரலாற்றில் புதிய அத்தியாயம் !!

உக்ரைனுடைய பாக்மூட் நகரத்தை கைபற்றி உள்ளதாக ரஷ்ய தனியார் ராணுவ அமைப்பான வாக்னரின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஸின் தனது வீரர்களுடன் அறிவித்துள்ளார் இந்த வெற்றி மிகப்பெரிய அளவில் ரஷ்யாவுக்கு முன்னேற்றம் என கூறப்படுகிறது.

இந்த சண்டை 224 நாட்கள் நீடித்துள்ளது, பாக்மூட் நகரம் முற்றிலமாக அழிவை சந்தித்துள்ளது, மேலும் 50 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் குறிப்பாக 30 நாட்களில் 15 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சண்டையின் பெரும் பகுதியை நடத்தியது WAGNER PMC ஆகும், இதுவரை உலக ராணுவ வரலாற்றில் எந்த ஒரு தனியார் ராணுவ அமைப்பும் ஒரு நாட்டின் ராணுவத்திற்கு எதிரான முழுமையான போரில் சண்டையிட்டது இல்லை அதுவும் சண்டையிட்டு தோற்கடித்ததும் இல்லை ஆகவே இது ராணுவ வரலாற்றில் முக்கிய திருப்பம் எனலாம்.

இந்த வாக்னர் ஒரே நேரத்தில் சிரியா உக்ரைன் சூடான் என மூன்று நாடுகளில் சண்டையிட்டு வருகிறது இதை எல்லாம் பாரத்து வரும் பல நாடுகள் குறிப்பாக சீனா வருங்காலத்தில் தனியார் ராணுவ அமைப்புகளை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் வாக்னரின் தலைவர் ப்ரிகோஸின் மற்றும் செச்சென் பிரதேச தலைவர் காதிரோவ் ஆகியோர் இந்த போரில் சரியாக ரஷ்ய நிர்வாகம் செயல்படவில்லை பாக்மூட்டில் உள்ள படைகளுக்கு சப்ளைகள் குறிப்பாக ஆயுதங்கள் வரவில்லை என விமர்சித்து காணொளிகள் வெளியிட்டு உக்ரைன் மற்றும் மேற்குலக நாடுகளை ஏமாற்றினர்.

இதை நம்பி அதிகளவில் உக்ரைன் படைகள் பாக்மூட் நகரில் குவிக்கப்பட்டன ஆனால் வாக்னர் மற்றும் இதர ரஷ்ய படைகள் தொடர்ந்து சரமாரியாக பாக்மூட் நகரம் மூழுவதையும் தாக்கி அழித்து சின்னபின்னமாக்கி உள்ளனர், இதை Information Warfare, Psychological Warfare க்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக கூறலாம்.

அதாவது Information warfare என்பது தவறான தகவலை அளித்து எதிரியை ஏமாற்றுவது, Psychological Warfare இதில் ஏதோ ஒன்றை கூறி எதிரியின் மனநிலையை தளர்த்துவது அல்லது அதீத நம்பிக்கை உருவாக்கி அதை சாதகமாக பயன்படுத்தி கொள்வதாகும் இரண்டுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை தான்.

இப்படி தந்திரமாக பேசி ஒட்டுமொத்த உக்ரைன் நேட்டோ மற்றும் மேற்குலக நாடுகள் அவற்றின் உளவுத்துறைகள் ராணுவங்களை ஏமாற்றி உள்ளனர், இவை எல்லாம் வருங்காலங்களில் ராணுவ அதிகாரிகளுக்கு உலகம் முழுவதும் கற்று கொடுக்கப்படும் பாடங்களாக மாறும் என்பதில் துளியும் ஐயமில்லை.