4ஆம் தலைமுறை பலிஸ்டிக் ஏவுகணையை அறிமுகம் செய்த ஈரான் இஸ்ரேலுக்கு குறி !!
1 min read

4ஆம் தலைமுறை பலிஸ்டிக் ஏவுகணையை அறிமுகம் செய்த ஈரான் இஸ்ரேலுக்கு குறி !!

ஈரான் தனது கொர்ரம்ஷாஹர் பலிஸ்டிக் ஏவுகணைகளின் வரிசையில் ஒரு நான்காம் தலைமுறை பலிஸ்டிக் ஏவுகணையை அறிமுகம் செய்து உள்ளது இதன் பெயர் கெபார்ஷெகான் ஆகும், இது 1500 – 2000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாகும்.

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்புகளை மற்றும் கண்டனங்களை தாண்டி தொடர்ந்து ஈரான் தனது ஏவுகணை திட்டங்களை விரிவுபடுத்தி வருகிறது குறிப்பாக பலிஸ்டிக் ஏவுகணைகளை அதிகரித்து கொண்டே வருகிறது.

ஆனால் இந்த திட்டங்கள் யாரையும் குறிவைத்தோ அல்லது யாரையும் தாக்கவோ இல்லை மாறாக தங்களது தற்பாதுகாப்புக்கு தான் என ஈரான் அரசு மற்றும் ராணுவம் ஆகியவை கூறி வருகின்றன.

மேற்குறிப்பிட்ட ஏவுகணையானது AIO – Aerospace Industries Organisation எனப்படும் ஏரோஸ்பேஸ் தொழிற்சாலை கூட்டமைப்பு எனும் ஈரான் அரசு நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும், இதனை ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கெபார்ஷெகான் என்ற இந்த ஏவுகணையின் பெயரில் உள்ள கெபார் பொதுவாக யூதர்களுக்கு எதிரான அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கெபார் யா யஹூத் என்கிற கோஷத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல் ஆகும்.