
அதிவேகமாக செல்லக்கூடிய ஆளில்லா இடைமறி கப்பல்களை படையில் இணைக்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.முதல் கட்டமாக 20 இதுபோன்ற கப்பல்களை படையில் இணைக்க கடற்படை திட்டமிட்டுள்ளது.
RMFIC-I என்ற திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே இந்த கப்பல்கள் மேம்படுத்தப்பட்டு, பிறகு இந்தக் கப்பல்கள் படையில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
45 நாட் வேகத்தில் கடற்பரப்பில் வேகமாக செல்லும் திறன் படைத்ததாக இந்தக் கப்பல்கள் இருக்கும்.மேலும் இந்தக் கப்பல்களின் எடை 17 டன்கள் அளவில் இருக்கும்.
இந்த கப்பல்கள் ரீமோட் கன்ட்ரோல் செய்யப்படும்.ஆளில்லா கப்பலாக இருந்தாலும் 14 பேரை மீட்கும் அளவிற்கு இடவசதி இருக்கும்.இந்தக் கப்பலில் 12.7mm SRGC மற்றும் 2 Acoustic Warning கருவி பொருத்தப்பட்டிருக்கும்.