கடற்பகுதி ஆபரேசன்களுக்காக ஆர்ச்சர்- NG ஆளில்லா விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் ?

ஒற்றை என்ஜின் கொண்ட ஆர்ச்சர்- NG ஆளில்லா விமானங்களை இந்த வருட இறுதியில் வெளியிட இந்தியாவின் ADE நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தில் ADE நிறுவனத்துடன் இணைந்து ஆர்ச்சர்- NG விமானத்தின் கடல்சார் வகையை பெற கடற்படை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விமானங்களை கண்காணிப்பு, உளவு சேகரிப்பு , ரோந்து மற்றும் தாக்குதல் நடத்த கடற்படை பயன்படுத்தலாம் என்பதால் இந்த விமானங்களை பெற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதன் மூலம் கடற்படையின் ரோந்து மற்றும் உளவு சேகரிக்கும் திறன் அதிகரிக்கும்.தற்போது இந்திய கடற்படை இரு அமெரிக்க MQ-9B சீ கார்டியன் ட்ரோன்களை இயக்கி வருகிறது.ஆனால் இவற்றில் ஆயுதங்கள் இணைக்கப்படவில்லை.

தற்போது 18 ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை பெற அமெரிக்காவிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளது.