12000 கோடி மதிப்புமிக்க 2500 கிலோ போதை மருந்து கேரள கடலோர பகுதி அருகே பறிமுதல் !!

NTRO எனப்படும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் உதவியோடு இந்திய கடற்படையின் உளவுத்துறை மற்றும் தேசிய போதைபோருள் தடுப்பு ஆணையம் ஆகியவற்றிற்கு கிடைத்த தகவலின் பேரில் இந்திய கடற்படையின் போர் கப்பல் INS TEG கேரள கடலோர பகுதி அருகே மிகப்பெரிய அளவில் போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.

வழி நெடுக சிறு படகுகளுக்கு விநியோகம் செய்யும் வகையில் ஒரு தாய் கப்பலில் இருந்த 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2500 கிலோ எடை கொண்ட மெத்தாம்ஃபெட்டமைன் எனும் போதை பொருளுடன் கப்பலில் இருந்த பாகிஸ்தானியர் ஒருவனும் கைது செய்யப்பட்டு உள்ளான்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் கொச்சி கடற்படை தளம் கொண்டு வரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது, இது 2047 வாக்கில் இந்தியாவை போதை பொருளற்ற நாடாக மாற்றும் நோக்கோடு துவங்கப்பட்ட ஆபரேஷன் சமுத்ரகுப்தாவின் ஒரு பகுதியாகும்.

மேற்குறிப்பிட்ட போது பொருட்கள் ஈரான் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள மக்ரான் கடலோர பகுதியில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது, ஆஃப்கானிஸ்தான் ஈரான் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து தான் ஆசியாவின் பெரும்பகுதி போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.