புதிய தொழில்நுட்பங்களை மிக வேகமாக உட்புகுத்த விரும்பும் தரைப்படை !!
இந்திய தரைப்படை மிக வேகமாக புதிய BMS – Battle Management System மற்றும் Integrated Surveillance Centre போன்றவற்றை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் மிக துரிதமாக செயலாற்றி வருகிறது.
மேற்குறிப்பிட்ட BMS – Battle Management System எனும் போர் மேலாண்மை அமைப்பானது கள நிலவரம் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து வழங்கும் அமைப்பாகும் இதற்காக பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையங்கள், தகவல் சேகரிப்பு மையங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன, இதற்கு ப்ராஜெக்ட் சாமா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இத்தகைய மையங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன, ஏற்கனவே உள்ள CIDSS – Combat Information Decision Support System எனும் அமைப்பை மேம்படுத்தி AIDSS – Army Information Decision Support System என செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளனர், இந்த அமைப்பு ஒரு கமாண்டர் முடிவெடுத்த உத்தரவு பிறப்பிக்க பேருதவியாக அமையும்.
ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையங்களை உருவாக்கும் விதமாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பல்வேறு வகையான சென்சார்களை ஒருங்கிணைக்கும் பணி BEL நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக இந்திய தரைப்படையின் பிரங்கி படை தேசிய நடுத்தர தூர பருவநிலை கண்காணிப்பு மையத்துடன் பிரங்கி தாக்குதல்கள் நடத்தும் போது இருக்கும் பருவநிலையை அறிந்து அதற்கேற்ப தாக்குதல் நடத்தும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.