
காஷ்மீர், ஹிமாச்சல் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வரும் மே 6 முதல் இந்திய விமானப்படை மாபெரும் தாக்குதல் தொடர்பான போர்பயிற்சியை மேற்கொள்ள உள்ளது.இந்திய விமானப்படையின் திறனை சோதிக்கும் பயிற்சியாக இந்த பயிற்சி அமையும்.
புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய தாக்குதல் யுக்திகளை பயன்படுத்தி இந்திய விமானப்படையின் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் விதமாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் எதிரிகளுக்கு எதிரான தாக்குதல் பலத்தை வெளிப்படுத்தும் பொருட்டும் இந்தப் பயிற்சி நடைபெறும்.
இந்திய விமானப்படையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள SCALP மற்றும் Hammar ஏவுகணைகளின் திறன்களையும் இந்த பயிற்சியில் சோதனைசெய்து பார்க்கப்பட உள்ளது.
இரபேல் விமானங்களின் கண்ணுக்கு எட்டும் தூரங்களுக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் திறனும் மிராஜ் 2000 மற்றும் சுகாய் விமானங்களுடன் இணைந்து பரிசோதனை செய்து பார்க்கப்பட உள்ளது.