1 min read
இந்திய வியட்நாம் பிரதமர்கள் பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை !!
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வரும் G7 மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி மற்றும் வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின் ஆகிய இருவரும் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி கொள்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இந்தியாவை போன்றே சீனாவுடன் பிரச்சினைகளை எதிய்கொண்ட எதிர்கொண்டு வரும் மற்றும் போர் புரிந்த நாடு தான் வியட்நாம் ஆகவே இருதரப்பு உறவுகளும் இயற்கையாகவே நட்புறவை அடிப்படையாக கொண்டதாகும்.
தொடர்ந்து இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான பாதுகாப்பு துறை ஒத்துழைப்பை அதிகபடுத்தவும் வர்த்தகம் அறிவியல் ஆகியற்றிலும் நெருங்கி செயல்படுவது குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.