ஆபரேசன் காவேரி: நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து கிட்டத்தட்ட 3,000 இந்தியர்கள் மீட்பு

  • Tamil Defense
  • May 1, 2023
  • Comments Off on ஆபரேசன் காவேரி: நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து கிட்டத்தட்ட 3,000 இந்தியர்கள் மீட்பு

சூடானில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 3000 இந்தியர்கள் மீட்கப்பட்டு ஜெத்தா கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.மேலும் இந்தியர்களை மீட்கும் முயற்சி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

122 இந்தியர்களுடன் சி-130ஜே விமானம் ஜெத்தா சென்றடைந்தது.இது 16வது முறை ஆகும்.இந்தியர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு ஜெத்தா கொண்டு செல்லப்படுகின்றனர்.

விமானங்கள் தவிர போர்க்கப்பல்களில் இருந்தும் பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.முன்னதாக இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் தேக் போர்க்கப்பல் 288 இந்தியர்களை சூடானில் இருந்து மீட்டது.

மேலும் ஐஎன்எஸ் சுமேதா போர்க்கப்பல் 300 இந்தியர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.சூடானில் தற்போது இராணுவம் மற்றும் துணை இராணுவப்படைகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.