தொடர் விபத்துகள் காரணமாக இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள Light Combat helicopter ( LCH) செயல்பாடுகளை இந்திய விமானப்படை மற்றும் இந்திய இராணுவம் நிறுத்தியுள்ளது.த்ருவ் வானூர்திகள் தொடர்ந்து விபத்துக்குள்ளான காரணத்தால் இந்த தாக்கும் வானூர்தியின் செயல்பாடும் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இந்தியா 15 வானூர்திகளை ஆர்டர் செய்தது.அவற்றில் 10 விமானப்படைக்கும்,5 இராணுவத்திற்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது.தற்போது விமானப்படையில் 5 வானூர்திகள் உள்ளன.அவற்றின் செயல்பாடுகள் தற்போது நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
LCH வானூர்தியின் பல்வேறு பாகங்கள் த்ருவ் வானூர்தியில் இருந்து பெற்றவை என்பதால் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.