பாகிஸ்தானில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவாதியை போட்டு தள்ளிய இந்தியா !!

  • Tamil Defense
  • May 8, 2023
  • Comments Off on பாகிஸ்தானில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவாதியை போட்டு தள்ளிய இந்தியா !!

கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானுடைய லாகூர் நகரில் ஜோஹார் டவுன் பகுதியில் வைத்து காலிஸ்தான் கமாண்டோ படை Khalistan Commando Force KCF எனப்படும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவனை மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.

பரம்ஜீத் சிங் பன்வார் மற்றும் மாலிக் சர்தார் சிங் என அறியப்படும் இவன் மிக முக்கியமான காலிஸ்தான் பிரிவினைவாதி ஆவான், இவன் இந்திய பஞ்சாபின் தாரன் தாரன் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவன் ஆவான்.

பின்னர் காலிஸ்தான் ஆதரவு நிலைபாட்டை கொண்ட அவன் இந்தியாவில் அந்த பயங்கரவாதிகள் கொடுரமாக ஒடுக்கப்பட்ட போது பாகிஸ்தானுக்கு தப்பி சென்று அங்கிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்தான்.

சனிக்கிழமை காலை ஆறு மணியளவில் வீட்டின் அருகேயுள்ள சன் ஃபிளவர் சொசைட்டிக்கு சென்ற போது மர்ம நபர்கள் அவனை தலையில் சுட்டு கொன்றுள்ளனர், சுமார் 200 மீட்டர் தூரம் கதறி உதவி கேட்டபடியே அவன் ஒடியது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசோ அல்லது ரா அமைப்போ இந்த சம்பவத்தை நேரடியாக ஒப்பு கொள்ளவில்லை என்பது கூடுதல் தகவல் ஆகும்.