இந்தியா-பிரிட்டிஷ் வீரர்கள் போர்பயிற்சி ; அஜயவாரியர்23

  • Tamil Defense
  • May 1, 2023
  • Comments Off on இந்தியா-பிரிட்டிஷ் வீரர்கள் போர்பயிற்சி ; அஜயவாரியர்23

இந்தியா மற்றும் பிரிட்டிஷ் வீரர்கள் இணைந்து மேற்கொள்ளும் அஜயவாரியர் பயிற்சி இனிதே தொடங்கியது.இரு நாட்டு வீரர்கள் சந்தித்து பயிற்சி மேற்கொள்வது இது ஏழாவது முறையாகும்.இந்த பயிற்சி மே 11 வரை நடைபெறும்.

இதற்கு முன்பு இந்தியாவின் உத்ரகாண்டில் இரு நாட்டு வீரர்கள் இணைந்து பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.பிரிட்டன் இராணுவத்தின் இரண்டாம் ராயல் கோர்க்கா படை வீரர்களும் இந்திய இராணுவத்தின் பீகார் ரெஜிமென்ட் வீரர்களும் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு வகையான சூழ்நிலைகளில் இரு நாட்டு வீரர்கள் இணைந்து செயல்படுவது போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி இரு நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும்.