குறைந்து வரும் விமானப்படையின் ஸ்குவாட்ரான்களின் எண்ணிக்கை

  • Tamil Defense
  • May 16, 2023
  • Comments Off on குறைந்து வரும் விமானப்படையின் ஸ்குவாட்ரான்களின் எண்ணிக்கை

இந்திய விமானப்படையின் ஸ்குவாட்ரான்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் இந்திய விமானப்படையின் திறனும் குறைந்து வருகிறது.

விரைவாக MRFA ஆர்டர் செய்யப்படவில்லை என்றாலும் மற்றும் தேஜஸ் விமானங்கள் நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படாமல் இருந்தாலும் எவ்வகையிலும் 2030க்குள் விமானப்படையின் ஸ்குவாட்ரான்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து விடும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதை பாராளுமன்ற நிலைக்குழுவிடம் இந்திய விமானப்படை வலியுறுத்திக் கூறியுள்ளது.விமானப்படையில் தற்போது 42 ஸ்குவாட்ரான்கள் இருக்க வேண்டும்.ஆனால் தற்போது 31 ஸ்குவாட்ரான்கள் தான் தற்போது உள்ளது.

இரு பக்கமும் எதிரிகளை வைத்துக்கொண்டு இவ்வாறு குறைந்த அளவில் ஸ்குவாட்ரான்கள் இருப்பது மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.

2025க்குள் 3 மிக்-21 ஸ்குவாட்ரான்கள் படையில் இருந்து விடுவிக்கப்படும்.இத்துடன் ஸ்குவாட்ரான்களின் எண்ணிக்கை மேலும் குறையும். MRFA திட்டத்தின் கீழ் 114 விமானங்கள் ஆர்டர் செய்ய மேலும் தாமதங்கள் ஆகி வருகிறது.

Mig29UPG, Jaguars & Mirage 2000 விமானங்கள் 1980களில் படையில் இணைக்கப்பட்டவை.அவைகளும் இந்த பத்தாண்டுகளில் படையில் இருந்து விடுவிக்கப்படும்.