காஷ்மீர் தாக்குதல் நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பு படைகளுக்கு மிகப்பெரிய சேதம் !!

  • Tamil Defense
  • May 5, 2023
  • Comments Off on காஷ்மீர் தாக்குதல் நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பு படைகளுக்கு மிகப்பெரிய சேதம் !!

இன்று காஷ்மீரின் ரஜோரி செக்டாரில் கண்டி காட்டு பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் நான்கு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்திய தரைப்படையின் மிகச்சிறந்த படையணியான 9 ஆவது பாரா சிறப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் காயமடைந்துள்ளதாக தெரிகிறது, மேலும் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நீண்ட நாட்களுக்கு பிறகு 9ஆவது பாரா சிறப்பு படையணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சேதமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.