லெஃடினன்ட் கர்னல் ஃபரிதா ரெஹானா

  • Tamil Defense
  • May 30, 2023
  • Comments Off on லெஃடினன்ட் கர்னல் ஃபரிதா ரெஹானா

1966ஆம் ஆண்டு இந்திய தரைப்படையின் முதல் பெண் பாராசூட் வீராங்கனை மற்றும் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர், 1971 போரில் ஆபரேஷன் காக்டஸ் லில்லி நடவடிக்கையின் போது மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார்.

அப்போது அவர் கள முன்னனியில் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார், இவருக்கு வங்கதேச எல்லையோர சேவைக்காக பஷ்சிமி நட்சத்திர பதக்கம் மற்றும் வங்கதேச எல்லைக்குள் சேவையாற்றியதற்காக பூர்வி நட்சத்திர பதக்கம் ஆகியவை அளிக்கப்பட்டது.

மேலும் இவர் சமீபத்தில் துருக்கி பூகம்பத்தின் போது அங்கு சென்று சிறப்பாக பணியாற்றிய இந்திய தரைப்படையின் அதிவிரைவு மருத்துவ படையணியான 60 PARA FIELD HOSPITAL படையணியின் முதலாவது பெண் CO – Commanding Officer கட்டளை அதிகாரி என்ற பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.