
தொடர்ச்சியாக அடுத்தடுத்து இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய தரைப்படை ஆகியவற்றிற்கு சொந்தமான மூன்று த்ரூவ் இலகுரக ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகின, இதில் கடைசியாக நடைபெற்ற விபத்தில் ஒரு தரைப்படை வீரர் வீரமரணம் அடைந்தார்.
இதை தொடர்ந்து அனைத்து த்ரூவ் ஹெலிகாப்டர்களும் பறக்க தடை விதிக்கப்பட்டது மேலும் தொடர்ந்து விபத்துக்கான காரணத்தை கண்டறியவும் குழு அமைக்கப்பட்டது, இதை தொடர்ந்து ஒரு முக்கியமான பாகத்தை மாற்றியமைக்க பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி என்ஜின் கியர் பாக்ஸில் உள்ள அலுமினியத்தால் ஆன கட்டுபாட்டு கம்பி ஒன்றை மாற்றிவிட்டு இரும்பு கம்பியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது, இதன் காரணமாக கட்டுபாட்டு திறன் அதிகரிக்கும் மேலும் உலோக தளர்ச்சி அடைதல் குறையும் எனவும் கூறப்படுகிறது.
இந்திய முப்படைகளில் 222 த்ரூவ் ஹெலிகாப்டர்களும் இந்திய கடலோர காவல்படையில் 20 ஹெலிகாப்டர்களும், எல்லை பாதுகாப்பு படையில் 6 ஹெலிகாப்டர்களும் சேவையில் உள்ளன மீதமுள்ளவை இந்திய அரசு, வெளிநாட்டு படைகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.