
ஸ்பெயினில் செவில்லே எனுமிடத்தில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்திற்கான தளத்தில் இருந்து இந்தியாவிற்கான முதல் C295 விமானம் தனது முதல் பறத்தலை மேற்கொண்டது.
கடந்த 2021 செப்டம்பரில் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 C295 விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.இந்தியாவிடம் தற்போது செயல்பாட்டில் உள்ள பழைய AVRO விமானங்களுக்கு மாற்றாக இந்த விமானங்களை இந்தியா ஆர்டர் செய்தது.
இந்த விமானங்களில் முதல் 16 விமானம் ஸ்பெயினில் உள்ள செவில்லே என்னுமிடத்தில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தில் கட்டமைக்கப்பட்டு பறக்கும் நிலையில் இந்தியாவிற்கு டெலிவரி செய்யப்படும்.
மற்ற 40 விமானங்களும் இந்தியாவில் குஜராத்தில் உள்ள Tata Advanced Systems (TASL) நிறுவனம் கட்டமைத்து டெலிவரி செய்யப்படும்.