
காலை 7 மணியளவில் பயங்கரவாதிகளை படையினர் சுற்றி வளைத்து நெருங்கினர், பயங்கரவாதிகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் முடக்கிய போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒருவன் கொல்லப்பட்டான மேலும் ஒரு பயங்கரவாதி காயமடைந்து உள்ளதாக தெரிகிறது.
ஒரு AK-47 துப்பாக்கி, நான்கு AK-47 மேகஸின்கள், AK-47 துப்பாக்கிக்கான 56 தோட்டாக்கள், ஒரு 9mm கைத்துப்பாக்கி மற்றும் அதற்கான ஒரு மேகஸின், 3 கையெறி குண்டுகள் மற்றும் ஒரு ஆயுத பை ஆகியவை கைப்பற்றபட்டுள்ளன.
கொல்லப்பட்ட பயங்கரவாதயின் அடையாளத்தை அறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன, ஆபரேஷன் த்ரிநேத்ராவில் இந்திய தரைப்படை, CRPF மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஆகியவை இணைந்து செயலாற்றி வருவது கூடுதல் தகவல் ஆகும்.