நேற்று இரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளின் மீது இரண்டு சிறிய ரக ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக சில காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ரஷ்ய தரப்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அப்போது க்ரெம்ளினில் இல்லை எனவும் இந்த சம்பவம் காரணமாக எவ்வித உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை எனவும்
மேலும் இந்த ட்ரோன்கள் மோதுவதற்கு முன்னரே வீழத்தப்பட்டதாகவும் இந்த தாக்குதலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்லும் நோக்கில் உக்ரைன் தான் நடத்தி உள்ளதாகவும் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆனால் உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார், உக்ரைனுக்கும் இந்த தாக்குதலுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.