ரஷ்ய அதிபர் மாளிகை ட்ரோன் தாக்குதல் ரஷ்யா நடத்திய நாடகமா ??

நேற்று ரஷ்ய அதிபர் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி நடைபெற்றுத அனைவருக்கும் தெரியும் ஆனால் இதன் பின்னனியில் யார் எந்த நாடு உள்ளது என்பது பற்றிய குழப்பம் நிலவுகிறது.

முதலில் ரஷ்யா இது பயங்கரவாத தாக்குதல் முயற்சியாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தியது பின்னர் உக்ரைன் தான் ரஷ்ய அதிபரை கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டி உள்ளது.

உக்ரைன் அரசு மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி ஆகியோர் இந்த தாக்குதலுக்கும் உக்ரைனுக்கும் துளியளவு கூட தொடர்பில்லை என தங்களது மறுப்பை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் உக்ரைன் உலகின் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான க்ரெம்ளின் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் மிக குறைவு ஆகவே இது ரஷ்யாவே அரங்கேற்றிய நாடகமாக இருக்கும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.

அதாவது இந்த தாக்குதலை ரஷ்யா நடத்திவிட்டு பொதுமக்கள் ஆதரவை பெறவும், மேலும் உக்ரைன் மீது மிக கடுமையான தாக்குதல்களை தொடுக்கவும் வேண்டி இந்த பொய்யான தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய தாக்குதல்களை False Flag Operation என அழைப்பர், பல முறை உலகளவில் போர்களில் இத்தகைய தாக்குதல்கள் பல்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.