கனரக வயர் இணைப்பு கொண்ட நீரடிகணை சோதனை மேற்கொள்ள உள்ள DRDO !!

நமது DRDO Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் விரைவில் Submarine Launched Wire Guided Heavyweight Torpedo வை சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது இது நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் வயர் மூலமாக கப்பலுடன் இணைக்கப்பட்ட கனரக நீரடிகணையாகும், இதனை விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள NSTL – Naval Science & Technology Labaratory எனப்படும் கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நீரடிகணை சுமார் 20 கிலோமீட்டர் தொலைவு வரை பயணிக்க கூடியதாகும் மேலும் இதனை கொண்டு கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்க முடியும் அதற்கு நீரடிகணையில் இருந்து கப்பலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் வயர் மூலமாக வழிகாட்ட முடியும்.

துல்லியமாக தாக்குதல் நடத்த உதவும் இந்த ஆயுதத்தால் இந்த கடல்சார் பாதுகாப்பு மிகப்பெரிய அளவில் வலுவடையும் மேலும் இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்றால் மிகையாகாது.