நாட்டிற்கு துரோகம் செய்த DRDO விஞ்ஞானி கைது-பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்துள்ளார்
1 min read

நாட்டிற்கு துரோகம் செய்த DRDO விஞ்ஞானி கைது-பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்துள்ளார்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) பணிபுரியும் விஞ்ஞானி, பாகிஸ்தானுக்கு ரகசிய தகவலை வழங்கியதற்காக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டுள்ளார்.

வாட்ஸ்அப் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் “பாகிஸ்தான் உளவுத்துறை ஆப்பரேட்டிவ்” முகவருடன் விஞ்ஞானி தொடர்பில் இருந்ததாக ஏடிஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதன்மை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த விஞ்ஞானி, புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

எதிரி நாட்டு அதிகாரிகள் தம்மிடம் உள்ள இரகசியங்களை பெற்றால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தெரிந்திருந்தும் விஞ்ஞானி தனது பதவியை தவறாக பயன்படுத்தியதன் மூலம், நாட்டிற்கு துரோகம் செய்துள்ளார்.