ரஷ்யாவில் இருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்த ஜப்பான் ; கண்டனம் தெரிவித்த கனடா !!

  • Tamil Defense
  • May 19, 2023
  • Comments Off on ரஷ்யாவில் இருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்த ஜப்பான் ; கண்டனம் தெரிவித்த கனடா !!

ஜப்பான் கடந்த 2022ஆம் ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு சுமார் 155.2 பில்லியன் யென் மதிப்பிலான கடல்சார் உணவுகளை ரஷ்யாவிடம் இருந்து கடந்த ஆண்டு இறக்குமதி செய்து உள்ளது, இது 2021ஐ ஒப்பிடுகையில் 15 பில்லியன் யென்கள் கூடுதலாகும்.

இது பற்றி பன்னாட்டு அரசுகள் கருத்துகள் எதுவும் தெரிவிக்காத நிலையில் கனேடிய அரசு மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது கவலைகளை வெளிபடுத்தி உள்ளது, கனேடிய கன்சர்வேடிவ் கட்சி தலைவர் ஒருவர் கனேடிய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதை தொடர்ந்து கனேடிய வர்த்தக துறை அமைச்சர் மேரி என்ஜி ஜப்பான் அரசுடன் இந்த விவகாரம் குறித்து கனடா சார்பில் விவாதிக்கப்பட்டு கவலை தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு ஜப்பான் அரசை கேட்டு கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.