மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி !!

  • Tamil Defense
  • May 20, 2023
  • Comments Off on மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி !!

தஹாவ்வூர் ராணா ஒரு கனேடிய பாகிஸ்தானிய தொழிலதிபர் ஆவான் இவன் அமெரிக்காவில் சிறையில் உள்ளான் இவன் மும்பை தாக்குதல்களில் தொடர்புடையவன் அந்த அடிப்படையில் இவனை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை மனுவை அமெரிக்க அரசிடம் சமர்ப்பித்தது அந்த மனு நீதிமன்றம் சென்று வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

ராணா தாக்குதல்களில் மிக முக்கியமான பங்கு வகித்த டேவிட் ஹெட்லியின் சிறுவயது நண்பன் மேலும் டேவிட் ஹெட்லிக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்துள்ளான் மேலும் பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் துணை அமைப்புகளை ஆதரித்து வந்துள்ளான்.

2009ஆம் ஆண்டு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு, உளவு மற்றும் குற்ற விசாரணை அமைப்பான FBI Federal Bureau of Investigation எனப்படும் ஃபெடரல் புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு வழக்கறிஞர்களும் ராணா ஹெட்லிக்கு தெரிந்தே உதவியதாக வழக்காடினர் இதை தொடர்ந்து கலிஃபோர்னியா மத்திய மாவட்டத்தின் முதன்மை நிதிபதி ஜாக்குலின் சூல்ஜியான் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு ராணாவை நாடு கடத்த அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.