கடந்த வாரம் அமெரிக்கா தனது தடைகளை மீறி ஈரானுக்கு பலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்க தேவையான பொருட்களை வழங்கியதாக கூறி ஒரு சீனர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மேற்குறிப்பிட்ட நபரின் பெயர் ஷியான்ஃபிஜியாங் கியாவோ ஆகும், இவர் Sinotech Dalian Carbon & Graphite Manufacturing Corporation என்ற சீன நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இந்த நிறுவனமும் ஈரானுக்கு உதவியதால் அமெரிக்க தடை பட்டியலில் உள்ளது.
இனி மேற்குறிப்பிட்ட நபர் அமெரிக்கா அல்லது ஆதரவு நாடுகளுக்கு பயணிக்க முடியாது சொத்துக்களை வாங்க முடியாது என்பன போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.