உத்தராகண்டில் 6 கிமீ நீள சுரங்கம் சீன எல்லையில் உள்ள கடைசி காவல்சாவடிக்கு வழி !!

  • Tamil Defense
  • May 24, 2023
  • Comments Off on உத்தராகண்டில் 6 கிமீ நீள சுரங்கம் சீன எல்லையில் உள்ள கடைசி காவல்சாவடிக்கு வழி !!

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள காட்டியாபாகர் – லிபுலேக் சாலையில் பூண்டி மற்றும் கர்பியாங் இடையே சுமார் 6 கிலோமீட்டர் நீளத்திற்கு சுரங்க பாதை ஒன்றை கட்டமைக்க உள்ளதாகவும் இதன் மூலம் இந்திய சீன எல்லையில் லிபுலேக் கணவாய் அருகேயுள்ள கடைசி இந்திய காவல் சாவடிக்கு வழி ஏற்படுத்த முடியும் என BRO அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் இந்த சுரங்கத்தை கட்டுவதற்கான சர்வே பணிகளை மேற்கொள்ள ATINOK India Consultants நிறுவனத்திற்கு வழங்கி உள்ளதாகவும் தற்போது அந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஒரு வருட காலகட்டத்திற்குள் அறிக்கை சமர்பிக்கப்படும் எனவும் இந்த திட்டத்திற்கான BRO தலைமை பொறியாளர் ஹிரக் விமல் கோஸ்வாமி தெரிவித்தார்.

இது 2000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டமாகும் இது பணிகள் நிறைவடைய 4 – 5 ஆண்டுகள் ஆகலாம் எனவும், மேற்குறிப்பிட்ட 6 கிமீ நீள சுரங்கப்பாதை ஒருவழி சாலையாகவும் மீதமுள்ள பகுதிகள் இருவழியாகவும் கட்டமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேற்குறிப்பிட்ட BRO – Border Roads Organisation எல்லையோர சாலை கட்டுமான நிறுவனம் இருவழி பாதை சாலை பகுதிகளின் கட்டுமானத்தை நிறைவு செய்து அதன் மேல் தார் அடுக்கை அமைத்து வருவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது ஆகும்.