ரஷ்யாவை பாதுகாக்க படைகளை அனுப்புவோம் -உகாண்டா அதிபரின் மகன் !!

  • Tamil Defense
  • April 10, 2023
  • Comments Off on ரஷ்யாவை பாதுகாக்க படைகளை அனுப்புவோம் -உகாண்டா அதிபரின் மகன் !!

உகாண்டா நாட்டின் 9ஆவது அதிபராக இருப்பவர் யோவெரி மூசெவெனி இவர் இடி அமீன் மற்றும் மில்டன் ஒபோட்டே போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைபற்றி இன்று வரை போலி தேர்தல்கள் நடத்தி உகாண்டா நாட்டின் அதிபராக நீடித்து வருகிறார்.

இவரது மகன் தான் உகாண்டா ராணுவ தளபதியாக பதவி வகித்து ஒய்வு பெற்ற ஜெனரல் மூஹூசி கெய்னருகபா இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்வதற்கு பெயர் போனவர்.

அந்த வகையில் தற்போது அவர் ” தேவைப்படும் பட்சத்தில் உகாண்டா ரஷ்யாவை பாதுகாக்க தனது நாட்டு படைகளை ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கும் எனவும் இதற்காக நீங்கள் என்னை புடின் ஆதரவாளர் என்று வேண்டுமானாலும் கூறி கொள்ளுங்கள்

மேலும் மேற்குலகம் உக்ரைனுக்கு ஆதரவாக பொய் பிரச்சாரம் செய்து நேரத்தை வீண் அடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார், இவர் மிக தீவிரமான ரஷ்ய மற்றும் புடின் ஆதரவாளர் ஆவார்.

பொதுவாகவே ரஷ்யாவுக்கு ஆஃப்ரிக்க கண்டத்தில் நல்ல மதிப்பு உண்டு காரணம் பல ஆஃப்ரிக்க நாடுகள் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற சோவியத் ரஷ்யா தான் உதவியது.

ரஷ்யா தங்களுக்கு தீமை செய்யவோ தங்களை காயப்படுத்தவோ செய்யாத போது நாம் மட்டும் ரஷ்யாவுக்கு ஏன் தீங்கு செய்ய வேண்டும் என பல ஆஃப்ரிக்க நாடுகள் கருதுகின்றன.