ஃபின்லாந்து நேட்டோவில் இணைந்ததற்கு பதிலடி உண்டு ரஷ்யா !!

  • Tamil Defense
  • April 5, 2023
  • Comments Off on ஃபின்லாந்து நேட்டோவில் இணைந்ததற்கு பதிலடி உண்டு ரஷ்யா !!

செவ்வாய் கிழமை அன்று ஃபின்லாந்து 31ஆவது உறுப்பு நாடாக உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைந்தது, இது ரஷ்யாவை கடுமையாக கடுப்பேற்றி உள்ளது.

ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஃபின்லாந்து நேட்டோவில் இணைந்தது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் இதற்கு ரஷ்யா பதிலடி கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நேட்டோவில் சேருவதை தடுக்கவே ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது, ஆனால் அந்த போரே ஃபின்லாந்து தனது அணிசேரா கொள்கையை உதறிவிட்டு நேட்டோவில் இணைவதற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது.

இந்த விவகாரம் ரஷ்யாவுக்கு குறிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது, இந்த நிலையில் ரஷ்யா இதை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பது தெரியவில்லை.

காரணம் தற்போது ரஷ்யாவின் அனைத்து படைகளும் தங்களின் முழு கவனத்தை உக்ரைனில் செலுத்தி வருகின்றன, முக்கிய தளவாடங்கள் பெருமளவில் அங்கு குவிக்கப்பட்டுள்ளன ஆகவே ஃபின்லாந்து எல்லைக்கு ரஷ்யா எந்த வகை தளவாடங்களை அனுப்பி வைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ரஷ்யா ஃபின்லாந்து நேட்டோவில் சேர வேண்டும் என்ற கருத்தை வெளியிட்ட போதிலிருந்தே ஃபின்லாந்து உடன் எந்த ஒரு பிரச்சினையும் எங்களுக்கு இல்லை ஆகவே நேட்டோவில் இணையும் எண்ணத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.