உக்ரைனில் மேற்கத்திய சிறப்பு படைகள் இருப்பதை அம்பலபடுத்திய கசிந்த அமெரிக்க ஆவணங்கள் !|

  • Tamil Defense
  • April 12, 2023
  • Comments Off on உக்ரைனில் மேற்கத்திய சிறப்பு படைகள் இருப்பதை அம்பலபடுத்திய கசிந்த அமெரிக்க ஆவணங்கள் !|

சமீபத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க ஆவணங்களில் உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் சிறப்பு படைகள் நேரடியாக களமிறங்கி உள்ள தகவலும் இடம்பெற்றுள்ளது.

நீண்ட காலமாக ரஷ்யா உக்ரைன் போரில் உக்ரைனிய படைகளை மாத்திரம் அல்ல நேரடியாக நேட்டோ படைகளையும் எதிர்த்து போர் புரிவதாக குற்றம்சாட்டி வந்தத இதனை மேற்கத்திய நாடுகள் மறுத்த நிலையில் தற்போது அம்பலமாகி உள்ளது.

ஆவணங்களில் உள்ள தகவல்களின்படி இங்கிலாந்து தான் அதிகளவில் அதாவது 50 சிறப்பு படையினரை களமிறக்கி உள்ளது, லாத்வியா 17 , ஃபிரான்ஸ் 15, அமெரிக்கா 14 மற்றும் நெதர்லாந்து 1 என்ற எண்ணிக்கையில் சிறப்பு படைகளை களமிறக்கி உள்ளன.

அதே நேரத்தில் அந்த ஆவணங்களில் உக்ரைனில் இந்த படைகள் எங்கு உள்ளன, எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்பது பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் நேரடியாக நேட்டோவால் களமிறக்கப்பட்டு இருக்கலாம் எனவும் இவர்களின் எண்ணிக்கை முன் பின் வேறுபடலாம் மேலும் சிறிய அளவில் இருந்தாலும் சிறப்பு படைகளின் தன்மை காரணமாக அவற்றின் செயல்பாடு திறன் மிக்கது எனவும் கூறுகின்றனர்.