சீன கண்காணிப்பு பலூனை சுட்டு வீழ்த்தியது பற்றி இந்தியாவோடு விவாதித்தோம்-அமெரிக்க தளபதி !!

இந்தியா மற்றும் அமெரிக்க விமானப்படைகள் இடையேயான Ex Cope India 2023 இருதரப்பு கூட்டு பயிற்சிகளை மேற்பார்வையிட இந்தியா வந்த அமெரிக்க பசிஃபிக் விமானப்படை தளபதி ஜெனரல் கென்னத் வில்ஷ்பேக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் அமெரிக்க விமானப்படை சீன கண்காணிப்பு பலூனை சுட்டு வீழ்த்திய நிகழ்வை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த ஜெனரல் கென்னத் வில்ஷ்பேக் முக்கிய தகவல்களை வெளியிட்டார்.

அதாவது ஃபெப்ரவரி மாதம் அமெரிக்க விமானப்படை F-22 சீன பலூனை சுட்டு வீழ்த்திய பிறகு இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளின் குறிப்பாக இந்திய விமானப்படை தளபதியுடன் விவாதித்ததாகவும்

அப்போது ஒரு இலகுவான மெதுவாக பயணிக்கும் இலக்கை கையாண்ட விதம் அதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் போன்றவற்றை பற்றி தகவல்களை பரிமாறி கொண்டதாகவும் சம்பவம் நடைபெற்ற சில வாரங்கள் கழித்து தான் இது நிகழ்ந்தாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.