இருதரப்பு பாதுகாப்பு திட்ட வரைவை 10 ஆண்டுகளில் நிறைவேற்ற அமெரிக்கா ஃபிலிப்பைன்ஸ் திட்டம் !!

  • Tamil Defense
  • April 14, 2023
  • Comments Off on இருதரப்பு பாதுகாப்பு திட்ட வரைவை 10 ஆண்டுகளில் நிறைவேற்ற அமெரிக்கா ஃபிலிப்பைன்ஸ் திட்டம் !!

அமெரிக்கா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டு காலகட்டத்திற்குள் இருதரப்பு பாதுகாப்பு திட்ட வரைவை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஃபிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சர் என்ரிக்யூ மனாலோ பேசும்போது இருதரப்பும் தங்களது பங்களிப்பை மீண்டும் இருமடங்கு அதிகரித்துள்ளதாகவும் இந்த உறவு சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்ட ஒழுங்கை நிலைநாட்ட முக்கிய பங்காற்றும் என கூறியுள்ளார்.

முன்னாள் மூத்த அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பேசும்போது அமெரிக்கா ஃபிலிப்பைன்ஸ் நாட்டை சீனா தைவான் மீது படையெடுத்தால் அதை எதிர்கொள்வதற்கான ஏவுகணைகள் ராக்கெட்டுகள் போன்ற ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான இடமாக பார்ப்பதாக கூறுகின்றனர்.

அப்படி அமெரிக்கா தனது ஆயுதங்களை ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் நிறுவினால் அது தைவானுக்கு மட்டும் நன்மை பயக்காது மாறாக நீண்க காலப்போக்கில் சீனா ஃபிலிப்பைன்ஸ் உடன் பிரச்சினை செய்வதை தடுக்கும் வகையிலும் பேருதவியாக இருக்கும் என சர்வதேச பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.