முதல்முறையாக கூட்டு பயிற்சி காரணமாக இந்தியாவுக்கு போர் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா !!
1 min read

முதல்முறையாக கூட்டு பயிற்சி காரணமாக இந்தியாவுக்கு போர் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா !!

இந்திய மற்றும் அமெரிக்க விமானப்படைகள் இடையே கடந்த 2004ஆம் ஆண்டு முதல் Cope India என்ற பெயரில் இரு தரப்பு கூட்டு பயிற்சிகள் தற்போது வரை நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டுக்கான Cope India 2023 கூட்டு பயிற்சிகள் மேற்கு வங்க மாநிலம் பானாகர் மற்றும் கலைகுண்டா விமானப்படை தளங்களிலும் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா விமானப்படை தளத்திலும் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி துவங்கி வருகிற 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

முதல்கட்ட பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன இதில் இருதரப்பு சார்பிலும் C-130J Super Hercules, C-17 Globemaster, அமெரிக்க விமானப்படையின் சிறப்பு படை நடவடிக்கைகளுக்கான பிரத்தியேக MC-130J ஆகிய விமானங்களும் சிறப்பு படைகளும் பங்கு பெற்றன.

அமெரிக்க விமானப்படையின் 535ஆவது போக்குவரத்து படையணி மற்றும் இந்திய விமானப்படையின் 81ஆவது படையணியை சேர்ந்த C-17 Globemaster விமானங்கள் ஆகியவை JPADS – Joint Precision Air Dropping System அமைப்பு மூலமாக GPS மற்றும் கட்டுபடுத்தக்கூடிய பாராஷூட்டுகள் மூலம் துல்லியமாக தளவாடங்களை தேவையான இடத்தில் இறக்கும் பயிற்சிகளையும் மேற்கொண்டன.

தற்போது இரண்டாம் கட்ட பயிற்சிகள் கலைகுண்டா தளத்தில் துவங்கி நடைபெற்று வருகின்றன, இதில் இந்திய விமானப்படை சார்பில் Su-30MKI, LCA Tejas, Dassault Rafale, Sepecat Jaguar Darin-3 ரக போர் விமானங்கள் கலந்து கொள்கின்றன.

அமெரிக்க விமானப்படை சார்பில் முதன் முதலாக BONE என்ற பட்டப்பெயரை கொண்ட இரண்டு B-1 (ONE) தொலைதூர குண்டுவீச்சு விமானங்களும், 6 F-15 Eagle போர் விமானங்களும் பங்கேற்கின்றன, துவக்க நாளன்று அமெரிக்க பசிஃபிக் விமானப்படை தளபதி ஜெனரல் கென்னத் வில்ஷ்பேக் இந்திய சுகோயில் பறந்தது குறிப்பிடத்தக்கது.

இது தவிர AWACS எனப்படும் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விமானங்கள், எரிபொருள் டேங்கர் விமானங்கள் ஆகியவையும் ஜப்பான் விமானப்படையினர் பார்வையாளர்களாகவும் பங்கு பெற்றுள்ளனர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.