பஞ்சாப் ராணுவ தளத்திற்குள் துப்பாக்கி சூடு 4 வீரர்கள் மரணம் !!

  • Tamil Defense
  • April 12, 2023
  • Comments Off on பஞ்சாப் ராணுவ தளத்திற்குள் துப்பாக்கி சூடு 4 வீரர்கள் மரணம் !!

பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரத்தில் முக்கியமான ராணுவ தளம் அமைந்துள்ளது இங்கு இன்று காலை தளத்திற்கு உள்ளே துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும் அதில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட நான்கு வீரர்களும் ஒரு பிரங்கி படையணியை Artillery சேர்ந்தவர்கள் ஆவர், இவர்கள் மீது சக வீரர்கள் அல்லது சக வீரரே துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என பஞ்சாப் காவல்துறை ஊடகங்களிடம் தெரிவித்து இருந்த நிலையில்

ராணுவ வீரர் ஒருவர் ஏதோ சண்டை காரணமாக சக ராணுவ வீரர்களை சுட்டு கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது, கடந்த இரண்டு நாட்களாக ஒரு INSAS துப்பாக்கி மற்றும் இரண்டு மேகஸின்கள் காணாமல் போன நிலையில் அவற்றை கண்டுபிடிக்க ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தளத்திற்குள் அடர்ந்த செடி கொடிகள் இருக்கும் பகுதியில் அந்த வீரர் பதுங்கி இருந்துள்ளார், அவரை 9 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு பிடித்துள்ளதாகவும், துப்பாக்கி சூடு நடைபெற்றதுமே தளத்தின் அதிவிரைவு படையணிகள் தளத்தை முற்றிலுமாக அடைத்து தேடுதல் வேட்டை நடத்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

சண்டைக்கான காரணம் தெரியவில்லை அதை கண்டுபிடிக்க ராணுவம் மற்றும் பஞ்சாப் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றன என்பது கூடுதல் தகவல் ஆகும்.