ரஷ்யாவுடன் இணைந்து அமெரிக்கா இங்கிலாந்தை எதிர்த்து செயலாற்ற திட்டமிட்ட UAE !!
1 min read

ரஷ்யாவுடன் இணைந்து அமெரிக்கா இங்கிலாந்தை எதிர்த்து செயலாற்ற திட்டமிட்ட UAE !!

சமீபத்தில் கசிந்து அமெரிக்க உளவுத்துறை ஆவணங்களில் ஐக்கிய அரபு அமீரகம் UAE ரஷ்யாவுடன் இணைந்து அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆகிம நாடுகளை எதிர்த்து செயலாற்ற திட்டமிட்டதாக தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது ரஷ்ய வெளிநாட்டு உளவுத்துறையான FSB உளவாளிகள் UAE உளவுத்துறையான SIA – Signals Intelligence Agency அமைப்பினரை அமெரிக்க CIA மற்றும் பிரிட்டிஷ் MI6 உளவு அமைப்புகளை எதிர்த்து செயலாற்ற சம்மதிக்க வைத்ததாக பரிமாறிய தகவலை அமெரிக்கா இடைமறித்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் கோபமாக மறுத்துள்ளது மேலும் ரஷ்யாவுடன் ஐக்கிய அரபு அமீரகம் உறவுகளை பலப்படுத்தி வருவதாக கூறப்படும் தகவல் மிக மிக பொய்யானது என காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரஷ்யா தன் மீதான சர்வதேச அளவிலான பொருளாதார தடைகள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மூலமாக தனது ஏவுகணைகள் மற்றும் பல்வேறு தளவாடங்களுக்கு தேவையான பாகங்களை பல நாடுகளிடம் இருந்து வாங்கி வருவதாகவும்

ஐக்கிய அரபு அமீரகம் ரஷ்யாவுக்கு தொடர்ச்சியாக ஆளில்லா வானூர்திகளை ஏற்றுமதி செய்து வருவதாகவும், ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான வரத்தகம் சுமார் 57% அதிகரித்து உள்ளதாகவும்

ரஷ்யாவின் அரசுத்துறை எரிசக்தி நிறுவனமான Lukoil ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது நடவடிக்கைகளை துவங்கி உள்ளதாகவும், அந்நாட்டின் ஃப்யூஜைரா துறைமுகம் ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்திற்கான பெட்டக மாற்று முனையமாக மாறி உள்ளதாகவும்

ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான பெட்ரோலியம் சாராத வர்த்தகம் பல மடங்கு அதிகரித்து உள்ளதாகவும், ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்கள் மேற்கத்திய நாடுகளில் முடக்கப்படுவதால் தற்போது அதிகளவில் துபாயில் அவர்கள் சொத்துக்களை வாங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.