ஊடுருவ முயன்ற பாக் பயங்கரவாதி சுட்டுகொலை, தப்பியோரை தேடும் ராணுவம் !!

  • Tamil Defense
  • April 10, 2023
  • Comments Off on ஊடுருவ முயன்ற பாக் பயங்கரவாதி சுட்டுகொலை, தப்பியோரை தேடும் ராணுவம் !!

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜம்மு காஷ்மீரின் பூஞ்சு மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் நடைபெற்ற ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக தடுத்துள்ளனர்.

இதுபற்றி பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் லெஃப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் அளித்த தகவலின்படி மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதாகவும்

ரோந்து குழுவினர் அவர்களை கண்டபோது துப்பாக்கி சண்டை மூண்டதாகவும் நமது வீரர்களின் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்ட நிலையில் இரண்டு பயங்கரவாதிகள் தப்பி ஒடியதாகவும்

கொல்லப்ட்ட பயங்கரவாதியின் உடல் அதே இடத்தில் கிடப்பதாகவும், தப்பி ஒடிய பயங்கரவாதிகள் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி உள்ளதாகவும் அந்த பகுதியை சுற்றி வளைத்து இந்திய படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.