ஃபின்லாந்தை தொடர்ந்து நேட்டோவில் இணைய விரும்பும் ஸ்வீடன் தடையாக இருக்கும் துருக்கி மற்றும் ஹங்கேரி !!

  • Tamil Defense
  • April 5, 2023
  • Comments Off on ஃபின்லாந்தை தொடர்ந்து நேட்டோவில் இணைய விரும்பும் ஸ்வீடன் தடையாக இருக்கும் துருக்கி மற்றும் ஹங்கேரி !!

பல ஆண்டுகளாக ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகள் பின்பற்றி வந்த அணிசேரா கொள்கையை களைந்து விட்டு நேட்டோவில் இணைய விண்ணப்பித்தன இந்த விண்ணப்பத்தை அனைத்து நேட்டோ நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் ஒரு நாடு மறுத்தால் கூட விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

இந்த நிலையில் இரண்டு நாடுகளின் விண்ணப்பத்திற்கு எதிராக துருக்கி மற்றும் ஹங்கேரி செயல்பட்டு வந்தன இதற்கு காரணமாக துருக்கியில் உள்ள குர்து பிரிவினைவாதிகளுக்கு இரண்டு நாடுகளும் ஆதரவு தெரிவித்ததும்

குர்து மக்களை ஒடுக்குவதன் காரணமாக துருக்கிக்கு ஆயுத ஏற்றுமதி செய்ய தனது நாட்டு நிறுவனங்களுக்கு ஃபின்லாந்து தடை விதித்ததும் சுட்டி காட்டபட்டது இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபின்லாந்து இவற்றில் துருக்கிக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்த நிலையில் துருக்கி ஆதரவு அளித்தது தொடர்ந்து ஹங்கேரியும் ஆதரவு அளித்தது.

ஆனால் தற்போது ஸ்வீடனுடைய கோரிக்கையை மேற்குறிப்பிட்ட காரணங்கள் தவிர்த்து ஸ்வீடன் தலைநகரில் நடைபெற்ற குர்து பிரிவினைவாதிகளின் பேரணி, குரான் எரிப்பு போராட்டம் ஆகியவற்றை காரணம் காட்டி துருக்கியும், ஹங்கேரி அதிபர் விக்டர் ஒர்பானை விமர்சித்ததை காரணம் காட்டி ஹங்கேரியும் முடக்கி வருகின்றன.

பலர் கூறும்போது துருக்கி மற்றும் ஹங்கேரி அதிபர்கள் இடையே நல்ல ஒத்துழைப்பு உள்ளதாகவும் இரண்டு நாடுகளும் ஒருவக்கு ஒருவரின் பாதுகாப்பு சிக்கல்களை மதித்து ஸ்வீடனுடைய விண்ணபத்தை முடிக்கி வருவதாகவும் கூறுகின்றனர்.

ஆகவே ஸ்வீடன் தனது கொள்கை மற்றும் செயல்பாடுகளை மாற்றி கொண்டு ஹங்கேரி மற்றும் துருக்கிக்கு ஆதரவான நிலைபாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, பிற நேட்டோ நாடுகளும் துருக்கி மற்றும் ஹங்கேரிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன, ஆகவே என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.