
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் சீனாவை எதிர்கொள்ள மேலும் ஆறு மாதங்களுக்கு சிறப்பு அதிகாரங்களை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த சிறப்பு அதிகாரங்களை இந்தியாவின் முப்படைகளுக்கும் வழங்கியது இதன் மூலம் எந்த அனுமதியும் இன்றி ஆயுதங்களை உடனுக்குடன் வாங்க முடியும்.
அப்படி பல ஆயுதங்களை வாங்குவதற்கான முயற்சிகள் இறுதி கட்டத்தில் உள்ளன ஆகவே இந்த சிறப்பு அதிகாரங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன, இதனால் இனியும் கூடுதலாக பல தளவாடங்களை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, படைகள் இந்த அதிகாரங்களை பயன்படுத்தி முழுக்க அல்லது குறைந்தபட்சம் 60% இந்திய பாகங்களை கொண்ட தளவாடங்களை தான் வாங்க வேண்டும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.