இந்தியா தயாரிப்பு ஆர்டில்லரி துப்பாக்கிகள் வாங்கிய சவுதி அரேபியா ?

  • Tamil Defense
  • April 7, 2023
  • Comments Off on இந்தியா தயாரிப்பு ஆர்டில்லரி துப்பாக்கிகள் வாங்கிய சவுதி அரேபியா ?

ராயல் சவுதி ராணுவம் பாரத் 52 (155 மிமீ, 52 கலிபர் இழுத்துச் செல்லப்படும் ரக ஹோவிட்சர்) மற்றும் கருடா வி2, 105 மிமீ ஆர்டில்லரி துப்பாக்கிளை சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சோதனைக்கு பிறகு இந்தியாவிடம் இந்த ஆர்டில்லரிகள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சௌதி இராணுவம் தற்போது GC-45 howitzer உபயோகித்து வருகிறது.இந்த 155mm ஆர்டில்லரிகளை Gerald Bull நிறுவனம் மேம்படுத்தியது.இந்த நிறுவனத்தை தற்போது இந்தியாவின் Kalyani Group கையகப்படுத்தியுள்ளது.
இந்த Bharat 52 என்பது GC-45 ஆர்டில்லரியின் நவீனப்படுத்தப்பட்ட வகை ஆகும்.

சௌதி இராணுவம் இந்த பாரத் 52 ஆர்டில்லரியை வாங்க ஆர்வம் தெரிவித்த பிறகு ஆர்டில்லரிகளை சோதனை செய்ததாகவும் தற்போது 70-80 ஆர்டில்லரிகள் வரை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆர்டில்லரிகளை பல தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் கல்யானி க்ரூப் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.