அமெரிக்காவுக்கு எதிராக புதிய நீர்மூழ்கி படையணியை உருவாக்க ரஷ்யா திட்டம் !!

  • Tamil Defense
  • April 9, 2023
  • Comments Off on அமெரிக்காவுக்கு எதிராக புதிய நீர்மூழ்கி படையணியை உருவாக்க ரஷ்யா திட்டம் !!

ரஷ்யா வருகிற 2024 – 2025 வாக்கில் அதனுடைய கிழக்கு பகுதியில் உள்ள பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் இயங்கும் புதிய நீர்மூழ்கி படையணி ஒன்றை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படையணி பசிஃபிக் பெருங்டலில் அமெரிக்காவை எதிர்த்து குறிப்பாக அமெரிக்காவின் மேற்கு கடலோர பகுதிகளை நெருங்கி சென்று இயங்கும் பணிகளை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

இந்த புதிய நீர்மூழ்கி படையணியில் அணு ஆயுதங்களை கொண்ட பொசைடன் ட்ரோன்களை சுமக்கும் பெல்கோரோட் மற்றும் கபாரோவ்ஸ்க் போன்ற பிரமாண்ட அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் பிரதான தளவாடங்களாக இருக்கும்.

இந்த புதிய படையணியின் தளமானது ரஷ்யாவின் கிழக்கில் உள்ள காம்சட்கா தீபகற்ப பகுதியில் அமைய உள்ளது, டிசம்பர் 2024 அல்லது 2025 நடுப்பகுதியில் இந்த தளம் செயல்பாட்டுக்கு வரும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.