
பாகிஸ்தான் மற்றும் உக்ரைன் இடையேயான பாதுகாப்பு துறை உறவுகள் நீண்ட காலமாக உள்ள நிலையில் தற்போது உக்ரைன் ரஷ்ய போருக்கு பிறகு இந்த உறவுகள் மேலும் மேலும் வலுவடைந்து வருகின்றன.
அதற்கு எடுத்து காட்டாக பாகிஸ்தான் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அனுப்பி வருகிறது, அந்த வகையில் இந்த மாதம் பாகிஸ்தான் கராச்சி துறைமுகம் வழியாக உக்ரைனுக்கு இரண்டு கப்பல்களில் சுமார் 230 கண்டெய்னர்களில் தளவாடங்களை அனுப்பி வைக்க உள்ளது.
நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த போது பாகிஸ்தான் நடுநிலை வகிப்பதாக கூறிவிட்டு உக்ரைனுக்கு ஆயுதம் அனுப்பி வைக்கும் இரட்டை நிலைப்பாட்டை பற்றி எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.