பணிக்காலத்தில் திருமணம் செய்ய அக்னிவீரர்களுக்கு தடை !!

  • Tamil Defense
  • April 4, 2023
  • Comments Off on பணிக்காலத்தில் திருமணம் செய்ய அக்னிவீரர்களுக்கு தடை !!

இந்திய தரைப்படை அக்னிபாத் திட்டத்தின் கீழ் படையில் இணையும் அக்னிவீரர்கள் முதல் நான்கு ஆண்டு காலத்திற்கு திருமணம் செய்ய தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

17 முதல் 21 வயது வரை உள்ளோர் அக்னிவீரர்களாக படையில் இணையலாம், ஆனால் அவர்களுக்கு சட்டப்பூர்வமான திருமண வயது பூர்த்தியானாலும் திருமணம் செய்து கொள்ள முடியாது இதற்காக நோட்டரி ஒப்புதல் பெற்ற எழுத்து அறிக்கையை அக்னிவீரர்கள் அளிக்க வேண்டும்.

முதல் நான்கு ஆண்டுகள் முடிந்து நிரந்தர பணி பெறுவோர் அல்லது படையில் இருந்து வெளியேறுவோர் திருமணம் செய்து கொள்ள தடையில்லை இந்த விதிமுறை கிராமப்புற இளைஞர்களை பாதிக்கும் என ஹரியானாவின் ஜிந்த் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் சங்க தலைவர் கேப்டன் ஈஷ்வர் சிங் தெரிவித்துள்ளார்.