32000 கோடி ரூபாய் செலவில் கப்பல்கள், ஏவுகணைகள், ரேடார்கள் வாங்க ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • April 1, 2023
  • Comments Off on 32000 கோடி ரூபாய் செலவில் கப்பல்கள், ஏவுகணைகள், ரேடார்கள் வாங்க ஒப்பந்தம் !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று சுமார் 32,000 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வகையான போர் கப்பல்கள், ரேடார்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்க பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்திய கடற்படைக்காக 11 அடுத்த தலைமுறை ரோந்து கப்பல்களை கோவா மற்றும் கொல்கத்தா கப்பல் கட்டுமான தளங்களிடம் இருந்து சுமார் 9781 கோடி ரூபாய் செலவில் வாங்கவும்

6 அடுத்த தலைமுறை ஏவுகணைக கலன்களை சுமார் 9805 கோடி ரூபாய் செலவில் கொச்சி கப்பல் கட்டுமான தளத்திடம் இருந்து வாங்கவும்

1700 கோடி ரூபாய் செலவில் இரண்டு பேட்டரி அளவிலான அடுத்த தலைமுறை கடல்சார் நடமாடும் பிரம்மாஸ் கடலோர பாதுகாப்பு அதாவது கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் வாங்கவும்

1700 கோடி ரூபாய் செலவில் கடற்படையின் போர் கப்பல்களில் முன்பகுதியில் இருக்கும் பிரங்கிகளுக்கான 13 Lynx – U2 தாக்குதல் கட்டுபாட்டு ரேடார்களை வாங்க BEL நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.

இந்திய தரைப்படைக்காக சுமார் 8160 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு ரெஜிமென்ட் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் BDL நிறுவனத்தடனும்

12 Swathi Weapon Locating Radar அதாவது ஸ்வாதி தளவாட கண்டறிதல் ரேடார்களை 990 கோடி ரூபாய் செலவில் BEL பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுலனத்திடம் இருந்து வாங்கவும் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.