விரைவில் நாக் மார்க்-2 டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனைகள் !!
1 min read

விரைவில் நாக் மார்க்-2 டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனைகள் !!

கடந்த ஆண்டு நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டாங்கிகளில் பயன்படுத்தக்கூடிய வகையிலான நாக் NAG மார்க்-2 MK2 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரிக்க போவதாக அறிவித்தது.

தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி அவற்றை டாங்கிகளில் இணைக்கும் பணிகள் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது, ஒவ்வொரு டாங்கிலும் தலா ஒரு ஏவுகணையை கொண்ட இரண்டு லாஞ்சர் அமைப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது.

இவற்றை இந்திய தரைப்படையின் பிரதான போர் டாங்கிகளில் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டு உள்ளனர், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இதற்கான சோதனைகளை நடத்த திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த நாக் மார்க்-2 ஏவுகணைகள் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஏவுகணைகள் ஆகும், மேலும் இந்த ஏவுகணைகளில் JVC அமைப்பு மற்றும் HELINA டாங்கி எதிர்ப்பு ஏவுகணையின் திறன்கள் இணைக்கப்பட்டுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.