அமெரிக்கர்களே உங்கள் அணு ஆயுதங்களுடன் நாட்டை விட்டு வெளியேறுங்கள் ஜெர்மன் பாராளுமன்ற உறுப்பினர் !!

  • Tamil Defense
  • April 7, 2023
  • Comments Off on அமெரிக்கர்களே உங்கள் அணு ஆயுதங்களுடன் நாட்டை விட்டு வெளியேறுங்கள் ஜெர்மன் பாராளுமன்ற உறுப்பினர் !!

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அன்று ஜெர்மனியின் இடதுசாரி கட்சியான டை லிங்கேவின் பாராளுமன்ற உறுப்பினரான செவிம் டாடெலான் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் கோரிக்கையை அமெரிக்காவை நோக்கி வைத்துள்ளார்.

அதாவது பாராளுமன்றத்தில் அவர் பேசும் போது சுமார் 78 ஆண்டுகளுக்கு முன் நேச நாட்டு படைகள் நாஜி படைகளை வெற்றி கொண்டு ஜெர்மன் மண்ணில் நுழைந்தன இன்று அமெரிக்க படைகளை தவிர அனைத்து படைகளும் வெளியேறி விட்டன.

ஆகவே அமெரிக்க படைகள் தற்போது ஜெர்மனியை விட்டு வெளியேறி நாடு திரும்பும் காலம் வந்து விட்டது அவர்கள் வெளியேறும் போது கூடவே தங்களது அணு ஆயுதங்களையும் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி பேசியுள்ளார்.

தற்போது அமெரிக்கா ஜெர்மனியில் 40 ராணுவ தளங்களை கொண்டுள்ளதும் அவற்றில் சுமார் 38,500 படைவீரர்களை நிலைநிறுத்தி உள்ளதும், 20 அணு ஆயுதங்களை பகிர்தல் ஒப்பந்தம் அடிப்படையில் வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.