இந்தியாவின் முதல் விமானப்படை பாரம்பரிய அருங்காட்சியகம் !!

சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் செக்டார்-18 பகுதியில் விரைவில் இந்தியாவின் முதல் விமானப்படை பாரம்பரிய அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அருங்காட்சியகத்தில் ஐந்து பழமையான விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன, அவற்றில் பிரதமானது ஏர் மார்ஷல் ஹர்ஜீந்தர் சிங் 1958ஆம் ஆண்டு வடிவமைத்த Kanpur-1 கான்பூர்-1 விமானம் ஆகும்.

இதை தவிர ஒரு சுவற்றில் இந்திய விமானப்படையின் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை சேவையாற்றி ஒய்வு பெற்ற உள்ள சுமார் 58 வெவ்வேறு வகையான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் மாதிரிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

மேலும் குடியரசு தின அணிவகுப்பில் காட்சிபடுத்தப்பட்ட தேஜாஸ், நேத்ரா, C-295, ப்ரச்சந்த் உள்ளிட்ட அனைத்து வானூர்திகளின் மாதிரிகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில் ஒரு நினைவு பரிசு கடை, விமானப்படை தீம் கொண்ட உணவகம், பல்வேறு போர்களில் இந்திய விமானப்படையின் பங்களிப்பை விளக்கும் 17,000 சதுர அடி அளவிலான பகுதி ஆகியவை உள்ளது.

augmented reality, virtual reality, hologram, simulators & electro mechanical ஆகியவற்றையும் இங்கே பார்வையாளர்கள் கண்டு ஒரு விமானியின் அனுபவத்தை பெற முடியும், கூடுதலாக இந்திய விமானப்படையின் செயற்கைகோள் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.