பாதுகாப்பு ஏற்றுமதியில் புதிய சாதனை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்த ஆயுத ஏற்றுமதி !!

  • Tamil Defense
  • April 4, 2023
  • Comments Off on பாதுகாப்பு ஏற்றுமதியில் புதிய சாதனை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்த ஆயுத ஏற்றுமதி !!

இந்தியா பாதுகாப்பு துறையில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது அதாவது இதுவரை இல்லாத அளவுக்கு 2022-2023 நிதியாண்டில் ஏறத்தாழ சுமார் 16,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

அதாவது கடந்த 2021-2022 நிதியாண்டை விடவும் இது சுமார் 3000 கோடி ரூபாய் அதிகமாகும், 2016-2017 காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது சுமார் 10 மடங்கு உயர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

2016- 2017ல் 1521 கோடி, 2017-2018ல் 4682 கோடி, 2018 – 2019ல் 10,745 கோடி,
2019 – 2020ல் 9115 கோடி,
2020 – 2021ல் 8434 கோடி,
2021 – 2022ல் 12,814 கோடி,
2022 – 2023ல் 15,920 கோடி என படிப்படியாக வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவின் 100 நிறுவனங்கள் சுமார் 85 நாடுகளுக்கு கப்பல்கள், நீர்மூழ்கிகள், ரோந்து கலன்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள், பிரங்கிகள், ஏவுகணைகள், ராக்கெட்டுகள், கவச வாகனங்கள், பல்வேறு பார்வை கருவிகள், உடல் மற்றும் தலை கவசங்கள் உதிரி பாகங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்து வருகின்றன, இது இந்திய நிறுவனங்களின் தரம் மற்றும் திறனுக்கு சான்றாகும்.

2025ஆம் ஆண்டு வாக்கில் மத்திய அரசு இந்தியாவின் பாதுகாப்பு தளவாட தயாரிப்புகளை சுமார் 1,75,000 கோடி ரூபாய்க்கு உயர்த்தவும் அடுத்தபடியாக ஏற்றுமதியை சுமார் 35,000 கோடியாக அதிகரிக்கவும் திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.