
சில நாட்கள் முன்னர் இந்திய கடற்படையின் சிறப்பு படைப்பிரிவான MARCOS மார்க்கோஸை சேர்ந்த வீரர் ஒருவர் மேற்கு வங்க மாநிலம் பானாகர் அருகே பாராசூட் மூலமாக குதிக்கும் பயிற்சியில் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
இறந்து போன வீரர் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த பெற்றி ஆஃபீசர் சந்தாக கோவிந்த் ஆவார், இவர் அமெரிக்க மற்றும் பல நாட்டு சிறப்பு படைகள் பயன்படுத்தும் RA-1 INTRUDER பாராசூட் அமைப்பை பயன்படுத்தி உள்ளார்.
தற்போது இந்திய கடற்படை இந்த விபத்துக்கான காரணத்தை அறியும் பொருட்டு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது ஆகவே விசாரணை முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது.
சில ஒய்வு பெற்ற சிறப்பு படையினர் கூறும்போது இந்த விபத்து HAHO High Altitude High Opening பயிற்சி ஆகும் சுமார் 23000 அடி உயரத்தில் இருந்து குதித்து உடனடியாக பாராசூட்டை திறந்து பல கிலோமீட்டர் அதாவது 60 கிலோமீட்டர் வரை இலக்கை நோக்கி சென்று தரையிறங்கும் பயிற்சிகளின் போது தான் நடைபெற்றுள்ளது
13000 அடி உயரத்துக்கு மேல் ஆக்ஸிஜன் குறைந்து விடும், இதனால் Hypoxia என்ற பாதிப்பு ஏற்பட்டு நினைவு இழப்பு ஏற்படும் அப்படி தான் இவர் கட்டுபாட்டை இழந்து தரையில் விழுந்திருக்கக்கூடும் என கூறுகின்றனர், பொதுவாக ராணுவ நபாராசூட் நடவடிக்கைகள் மிகுந்த ஆபத்து நிறைந்ததாகும் இதில் பல விதமாக மரணங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.