சிங்கப்பூரின் 750 கிலோ செயற்கைகோளை ஏவும் இந்தியா !!

  • Tamil Defense
  • April 20, 2023
  • Comments Off on சிங்கப்பூரின் 750 கிலோ செயற்கைகோளை ஏவும் இந்தியா !!

சிங்கப்பூர் நாட்டின் ST Engineering நிறுவனம் தயாரித்த தாழ்வான புவிவட்டபாதையில் இயங்கும் EOS – Earth Observation Satellite அதாவது பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள் ஒன்றை இந்தியா ஏவ உள்ளது.

இந்த ஏவு நடவடிக்கைக்கு TeLEOS-2 என பெயர் சூட்டப்பட்டுள்ளது, இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு சிங்கப்பூரின் இதை ரக செயற்கைகோள் ஒன்றை இந்தியா TeLEOS – 1 நடவடிக்கை மூலமாக ஏவி கொடுத்தது கூடுதல் தகவலாகும்.

தற்போது TeLEOS-2 நடவடிக்கைகாக இஸ்ரோவின் PSLV C-29 ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது, இந்த ஏவுதல் நடவடிக்கை மேற்குறிப்பிட்ட ராக்கெட்டின் 56 ஆவது ஏவு நடவடிக்கையாகும்.

சிங்கப்பூரின் செயற்கைகோள் 750 கிலோ எடை கொண்டது. தட்பவெப்ப நிலை, தேடுதல் மற்றும் மீட்புபோன்ற பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.